கொரோனா 2வது அலை எதிரொலி : ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

18 April 2021, 12:02 pm
JEE Cancel -Updatenews360
Quick Share

ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இணைந்து படிப்பதற்காக ஜெஇஇ தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு ஜெஇஇ மெயின் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0