செப்டம்பர் இறுதியில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை..!!

21 June 2021, 5:35 pm
Quick Share

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என ஐ.ஐ.டி., கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் 3வது அலை குறித்து ஐ.ஐ.டி., கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தொற்றின் 3வது அலை மக்களின் நடத்தை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

2வது அலை ஏற்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய இந்த ஆய்வில், 3வது அலை மூன்று விதத்தில் அமையலாம் எனத் தெரியவந்துள்ளது. கொரோனா 3வது அலை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் உச்சமடையும். ஆனால், 2வது அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மீண்டும் பரவல் அதிகரித்து, 2வது அலையைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், பாதிப்புக் குறைவாகவே இருக்கும். 3வது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஜூலை 15ம் தேதிக்குப் பின் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 2வது அலை குறித்து ஐஐடி கான்பூர் குழுவினர் நடத்திய ஆய்வில், கோவிட் 2வது அலை மிசோரம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் கடும் தீவிரத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த கணிப்பு சரியாக அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 166

0

0