‘கொரோனா 3ம் அலை 2ம் அலையை போல மோசமானதாக இருக்காது’: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
26 June 2021, 4:04 pm
Quick Share

புதுடெல்லி: கோவிட் 3வது அலை உருவானால் அது 2வது அலையைப் போல மிக மோசமாக இருக்காது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது, கொரோனா தொற்றையும், அதன் உருமாற்றமடைந்த வீரியமான தொற்றுக்களையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. டெல்டா பிளஸ் வகை வைரஸ் மூலம் நாட்டில் 3வது அலை பரவுவதற்கான அபாயம் உருவாகி உள்ளது.

டெல்டா வகை வைரசைக் காட்டிலும் டெல்டா பிளஸ் வைரஸ் அதிக வேகமாகப் பரவும் அபாயமும் உள்ளது. கோவிட் 3வது அலை உருவானால் அது 2வது அலையைப் போல மிக மோசமாக இருக்காது. ஆனாலும், கொரோனா 2வது அலையின் போது நாம் கற்ற பாடத்திலிருந்து படிப்பினைகளை பின்பற்றி, 3வது அலையை எதிர்கொள்ள வேண்டும்.

கொரோனா முதல் தவணை தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொண்டால் போதும் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. அனைவரும் 2வது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் தவணை வெறும் 33 சதவீத பாதுகாப்பை மட்டுமே தரும். 90 சதவீத பாதுகாப்பு 2வது தவணையை செலுத்திக் கொண்டால்தான் கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 297

0

0