ஒரே நாளில் 88 பேர்..! 700’ஐ நெருங்கியது கொரோனா பாதிப்புகள்..!

26 March 2020, 11:16 pm
Corona4_UpdateNews360
Quick Share

புதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 88 உயர்ந்ததை அடுத்து மொத்த எண்ணிக்கை 700’ஐ நெருங்கியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவித்து நோய் தோற்று மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சோதனையை விரிவாக்கியதில், இன்று புதிதாக 88 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 47 வெளிநாட்டினர், குணப்படுத்தப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்ட 42 பேர் மற்றும் இறந்த 16 பேர் உட்பட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 694 ஆக உள்ளது. 

Leave a Reply