கேரளாவை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா…!! ஒரே நாளில் 142 பேர் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
22 September 2021, 10:51 pm
TN corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,675 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 19,675 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 45,43,833 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 142 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 23,825 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,61,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 19,702 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 43,73,966 ஆக உயர்ந்துள்ளது என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் இதுவரை 3 கோடியே 43 லட்சத்து 59 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Views: - 167

0

0