நாட்டில் மீண்டும் ஊரடங்கா..? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன..?

14 April 2021, 3:57 pm
Nirmala sitharaman - updatenews360
Quick Share

டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் இந்தியாவின் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தக் கொரேனா தொற்றை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், முழு ஊரடங்கு ஒதுபோதும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்த அவர், நோய் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகரிப்பது, நோய் பாதிப்பை கண்டறிதல், உடனடி சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்துதல், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கட்டுபபாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட 5 அம்ச திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.

Views: - 34

0

0