‘கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதா கொரோனாவின் ஆட்டம் ‘ நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்..!

11 August 2020, 10:23 am
Quick Share

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை கனிசமாக குறைந்து வர தொடங்கியுள்ளது என மத்திய சுகாராத துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகானில் தொடங்கிய கொரோனா தொற்று சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு படையெடுத்தது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே நிலை தடுமாறியது.

இந்த சூழலில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, அடுத்தடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்படத்தொடங்கியது. இதன் கோரதாண்டவம் மஹாராஷ்டிராவில் தீவிரம் காட்டியது.

தொடர்ந்து, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று தீபோல் பரவியது. இந்த சூழலில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

மருத்துவர்களும், காவலர்களும் தங்கள் அயராத பங்களிப்பை முழுமையாக வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு சதவீதம் 2 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குணமடைந்தோர் விகிதம் 69.33 சதவீதமாக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட 6.39 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.