கேரளாவில் சுழன்றடிக்கும் கொரோனா: ஒரே நாளில் 16,671 பேருக்கு தொற்று உறுதி…!

Author: Udhayakumar Raman
25 September 2021, 9:52 pm
Cbe Corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரளா, கொரோனாவின் முதல் அலையை வெகுவாக கட்டுப்படுத்தி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபோது கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து தற்போது அசுர பாய்சலில் அனைத்து மாநிலங்களிலும் தனது பிடியை இறுக்கியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.
இந்த சூழலில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,671 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். ஒரே நாளில் 14,242 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 1,65,154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 120 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

Views: - 143

0

0