கேரளாவில் ஒரே நாளில் 32,801 பேருக்கு கொரோனா

Author: kavin kumar
27 August 2021, 10:41 pm
Corona Nurse-Updatenews360
Quick Share

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு 3-வது நாளாக இன்றும் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து உள்ளது.கேரளவில் இன்று ஒரே நாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,70,703 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32,801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,313 ஆக உயர்ந்துள்ளது.18,573பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் பாஸிடிவிட்டி விகிதம் 19.22% ஆக உள்ளது.சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,95,254 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 456

0

0