கேரளாவில் இன்று புதிதாக 7,955 பேருக்கு கொரோனா: ஏறி, இறங்கும் கொரோனா பாதிப்பு

Author: Udhayakumar Raman
16 October 2021, 8:06 pm
Corona_Vaccination_UpdateNews360
Quick Share

கேரளாவில் இன்று புதிதாக 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி 11,079 பேருக்கு கொரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 9,246 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தநிலையில் நேற்று அம்மாநிலத்தில் 8,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 26,791 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 11,769 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 90,885 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் 79,722 மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளன.

Views: - 245

0

0