தமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மக்களவையில் அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்..!

14 September 2020, 12:07 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு – அமைச்சர் ஹர்ஷவர்தன்..!

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு படையெடுத்த கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கில் மக்கள் செத்து மடிகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் ஆட்டம் உச்சகட்டத்தில்தான் உள்ளது.

இந்த சூழலில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. இடைவெளி இன்று தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் 47 மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

இதில் முக்கியமாக பெரும் தொற்று சட்ட திருத்த மசோதா விவாதிக்கப்படவுள்ளது. கொரோனா காலகட்டத்தை எதிர்கொண்டு வரும் சூழலில் இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் மற்றும் எம்.பி வசந்த குமார் உள்ளிட்ட மறைந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாத பேசிய மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மராட்டியம், ஆந்திரா, தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்று குறிப்பிட்டார். அதே சமயம் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

Views: - 8

0

0