தீவிரமடையும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு தொற்று உறுதி..!!

14 April 2021, 8:46 am
Corona_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவில் வேகம் காட்டி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராணுவ பிரிவினர் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில், துணை ராணுவ படைப் பிரிவுகளைச் சேர்ந்த 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பி.எஸ்.எப். ராணுவ பிரிவினரரில் 311 பேருக்கும், சி.ஐ.எஸ்.எப் படைப்பிரிவினரில் 43 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். பிரிவில், 28 பேர் புதிதாக தொற்று உறுதியாகி இருக்கிறது.

மேலும் ஐ.டி.பி.பீ. படை பிரிவினரரில் மேலும் 31 பேருக்கும், எஸ்.எஸ்.பி. படைப்பிரிவில் கூடுதலாக 8 பேருக்கும், என்.டி.ஆர்.எப். படைப்பிரிவினர் 19 பேருக்கும் மற்றும் என்.எஸ்.சி. பிரிவுகளில் 13 பேருக்கும் நேற்று ஒருநாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் துணை ராணுவத்தில் இதுவரை 55 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், 53 ஆயிரத்து 514 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துவிட்டதாகவும் ராணுவ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 208 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 23

0

0