தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று: கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள்…முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 11:23 am
Quick Share

கர்நாடகா: கர்நாடக விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை ஒமிக்ரான் தொற்றா என தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வகை வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டதால், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதற்கிடையே, இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதார அமைப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 1 முதல் 26ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்தனர். இதனிடையே, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கொரோனாவா, இல்லையா என்பது தெரியவரும். இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, சர்வதேச விமான நிலையத்தில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், கொரோனா நெகடிவ் என உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்கவும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 264

0

0