கொரோனா, ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் : நாளை முதல் நேரடி விசாரணை ரத்து.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2022, 7:38 pm
Supreme Court -Updatenews360
Quick Share

டெல்லி : நாளை முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் நாளை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 7 ஆம் தேதி முதல் காணொலி மூலம் விசாரணை நடத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற பதிவுத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.

Views: - 452

0

0