“இந்தியாவில் இதுவரை 3 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” – சுகாதாரத்துறை அமைச்சகம்..!

17 August 2020, 9:32 am
Quick Share

அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகள் மூலம் தொற்று பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதோடு, உயிரிழப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் செயல்பாட்டுக்கு வராத சூழலில் அதன் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கவே உலக நாடுகள் அனைத்தும் முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் இதற்கான தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டங்களில் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் பொது பயன்பாட்டுக்கு கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனால், தற்போதைக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளில் ஒன்றாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. இதனால், கொரோனா மாதிரிகள் பரிசோதனையை உலக நாடுகள் அதிக அளவில் மேற்கொண்டு தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து வருகின்றன.

இந்தியாவிலும் தினசரி 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதை இலக்காக கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக தினமும் 7 லட்சம் பரிசோதனைகள் என்ற அளவு எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை 3 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகள் மூலம் தொற்று பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதோடு, உயிரிழப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Views: - 32

0

0