தடுப்பூசி செலுத்திய நடிகை நக்மாவுக்கு கொரோனா : தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்!!

8 April 2021, 4:03 pm
Nagma Corona -Updatenews360
Quick Share

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்த நடிகை நக்மா, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக செயலாற்றி வருகிறார்.

கடந்த 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை நக்மாவுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனையில் அவருக்கு கொரேனா இருப்பது உறுதி செய்யப்பட, வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும் நக்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 0

0

0