எடியூரப்பாவை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சருக்கும் கொரோனா : தனிமைப்படுத்தப்பட்டார் குமாரசாமி!!

17 April 2021, 11:58 am
Kumarasamy Corona -Updatenews360
Quick Share

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படுவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாளாக நாளாக கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடதக்கது.

Views: - 15

0

0