இந்தியாவில் குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
7 August 2021, 1:33 pm
Quick Share

புதுடெல்லி: குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது இந்தியா முழுவதும் இதுவரை 50கோடிக்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்வதற்கு மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஒரு நாளைக்கு 2.5 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால், இன்று ஒரு நாளைக்கு 40லட்சமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால் இன்னும் சிறந்த முறையில் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கிறேன்.
மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறினார். பின்னர் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,

இந்தியா முழுவதும் 50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது பெருமையாகவுள்ளது. அதற்காக ஊடகத்துறையினரான உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள்தான் தடுப்பூசி மிகவும் அவசியம் என்ற செய்தியை மக்களிடம் சேர்த்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

Views: - 615

0

0