கொரோனா தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : பிரதமர் மோடி நம்பிக்கை..!

14 September 2020, 9:46 am
Quick Share

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும், தடுப்பூசி உலகில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் 47 மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முன்தாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனாவும் இருக்கிறது, கடமையும் இருக்கிறது.

கடமைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்த எம்.பி.,க்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை மக்களவையும், மாநிலங்களவையும் ஒரு நாளில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். இது சனி, ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். அனைத்து எம்.பி.க்களும் இதை ஏற்றுக்கொண்டனர் என கூறினார்.

தொடர்ந்து, கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். நாடு ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 7

0

0