“கொரோனா தடுப்பூசி” இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் – மத்திய அரசு தகவல்..!

21 August 2020, 6:16 pm
Quick Share

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி ‘கோவாக்சின்‘ இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி அளித்து உள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். இந்தியா தயாரித்த தடுப்பூசிகளின் செயல்திறன், சோதனைகள் முடிந்ததும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலாவைச் சேர்ந்த மற்ற இரு தடுப்பூசிகள் உற்பத்திக்கு குறைந்தபட்சம் கூடுதல் ஒரு மாதமாவது தேவைப்படும் மற்றும் சந்தையில் ஒரே கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். சோதனைகள் வெற்றிபெற்றால் 2021 முதல் காலாண்டில் தடுப்பூசிகள் பயன்படுத்த தயாராகும்.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், தடுப்பூசியை மலிவு மற்றும் மானிய விலையில் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் வெற்றிபெற்றால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியர்களுக்குக் கிடைக்கும்.

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தவிர, ஜைடஸ் காடிலா ’ஜைகோவ்–டி தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு–அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி நாடு முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

Views: - 35

0

0