இந்தியா அனுப்பிவைத்த கொரோனா தடுப்பு மருந்துகள்: நேபாளத்தை சென்றடைந்தது..!!

22 January 2021, 8:52 am
nepal vaccine - updatenews360
Quick Share

புதுடெல்லி: நேபாளம் மற்றும் வங்கதேசத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்த கொரோனா தடுப்பு மருந்துகள் அந்நாடுகளை சென்று அடைந்தன.

பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில், கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதன்படி, பூடானுக்கு 1.50 லட்சம் ‘டோஸ்’ மற்றும் மாலத்தீவுகளுக்கு 1 லட்சம் டோஸ் மருந்து, நேற்று முன் தினம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அண்டை நாடுகளான, வங்கதேசம் மற்றும் நேபாளத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் அந்நாடுகளை சென்றடைந்தன.

வங்கதேசத்துக்கு 20 லட்சம் டோஸ்களும், நேபாளத்துக்கு 10 லட்சம் டோஸ் மருந்துகளும் அனுப்பப்பட்டன. இந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். உள்நாட்டு தேவைகளுக்கான கையிருப்பை உறுதி செய்த பின், மற்ற நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0