ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கவுன்சிலர்கள்: அதிரடியாக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்த பாஜக…டெல்லி மாநகராட்சியில் சலசலப்பு..!!

Author: Rajesh
18 April 2022, 10:06 am
Quick Share

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி மாநகராட்சியை சேர்ந்த பாஜக கவுன்சிலர்களான அமர்லதா சங்க்வான், சரோஜ்சிங், அதுல்குமார் குப்தா, ராதாதேவி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சரோஜ்சிங்கின் கணவர் ஷெர்சிங், ராதாதேவியின் கணவர் ராஜு ராணா ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா பிறப்பித்துள்ளார். தங்கள் வார்டுகளில் நடக்கும் மாநகராட்சி பணிகளுக்காக இவர்கள் லஞ்சம் கேட்பதாக ஒரு செய்தி சேனல் நடத்திய ரகசிய படப்பிடிப்பில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், ஊழல் குற்றச்சாட்டுக்காக 3 கவுன்சிலர்களை பாஜக இடைநீக்கம் செய்தது.

Views: - 853

0

0