தீ விபத்தில் சிக்கிய குடிசை.. கருகி போன மகளின் திருமணம் : ரூ.10 லட்சம் எரிந்ததால் விவசாயிக்கு நேர்ந்த சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 4:46 pm
10 Lakhs Amount Burn -Updatenews360
Quick Share

தெலுங்கானா : சூர்யா பேட்டை மாவட்டத்தில் குடிசை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை முற்றிலும் சாம்பலாகிய நிலையில் நிலம் விற்று மகளின் திருமணத்திற்காக வைத்த ரூ.10 லட்சம் ரொக்கமும் கருகியது.

தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம் நேலமரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமனய்யா. அவர் கடந்த வாரம் தமது நிலத்தை விற்று மகள் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக பீரோவில் பத்து லட்சம் ரூபாயை வைத்து இருந்தார்.

நேற்று மாலை அவரது மனைவி குடிசையில் சமைத்து கொண்டிருந்த போது திடீரென அடுப்பில் இருந்து பொறி பரவி தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் குடிசை முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

இதனையடுத்து வீட்டில் இருந்த இரும்பு பீரோவை வெளியில் எடுத்து வந்து பார்த்தபோது அதில் உள்ள துணிகள் அனைத்தும் கருகி போயிருந்தன. பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாயும் எரிந்து போன நிலையில் இருப்பதைப் பார்த்து செய்வதறியாமல் குடும்பத்தார் திகைத்துப்போய் அழுது புலம்பி வருகின்றனர்.

மகள் திருமணத்திற்காக நகை வாங்க வைத்திருந்த பணம் தீயில் கருகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 252

0

0