போலி தங்க நாணயம் தயாரித்து வியாபாரம் : மோசடி கும்பல் கைது.. 95 போலி தங்க நாணயங்கள் பறிமுதல்!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2021, 7:03 pm
ஆந்திரா : போலி தங்க நாணய மோசடி வியாபாரம் செய்த கும்பலை கைது செய்த போலீசார் ரூ.13.96 லட்சம் ரொக்கம் மற்றும் 92 போலி தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் போலி தங்க நாணய மோசடி வியாபாரம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் அதே போன்ற சம்பவம் ஒன்று அனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் போலி தங்க நாணய மோசடி கும்பலை சேர்ந்த 4 பேரை பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து பதிமூன்று லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பணம், 92 போலி தங்க நாணயங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Views: - 312
0
0