பைக்கில் சென்ற போது மின்னல் தாக்கி உடல் கருகி தம்பதி பலி : உயிருக்கு போராடிய குழந்தை!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 3:38 pm
Lightnin Attack Dead -Updatenews360
Quick Share

தெலுங்கானா : மஞ்சிரியாலாவில் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலாவை சேர்ந்த கணவன்-மனைவியான வெங்கடேஷ் மற்றும் மௌனிகா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

மேம்பாலம் மீது அவர்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென்று மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் வெங்கடேஷ், மௌனிகா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தனர்.

படுகாயம் அடைந்த அவர்கள் மகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். மின்னல் தாக்கி மரணமடைந்த இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Views: - 179

0

0