ஜாமீன் அளித்த நீதிமன்றம்… ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதி : உற்சாகத்தில் கட்சியினர்!!
Author: Udayachandran RadhaKrishnan20 November 2023, 9:29 pm
ஜாமீன் அளித்த நீதிமன்றம்… ஆந்திர முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதி : உற்சாகத்தில் கட்சியினர்!!
ஆந்திராவில், முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு வாரியத்தில், 371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவை கடந்த செப்., 9ல் தேதி சி.ஐ.டி., போலீசார் அதிரடியாக கைது செய்து, ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த அக்., 31ல் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திர உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஏற்கனவே, வரும் 28ம் தேதி வரை இடைக்கால ஜாமின் நிலுவையில் இருப்பதால், அதுவரை பொதுக்கூட்டங்களில் அல்லது இவ்வழக்கு குறித்தோ பொதுவெளியில் பேச சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
0
0