வெப் சீரிஸ் பாணியில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு, தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற மகன் கைது

15 January 2021, 1:10 pm
Quick Share

டில்லியில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற மகனையும், அவனது நண்பனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லி சாகிக் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நதீம், இவர் தனது தந்தையுடன் சேர்ந்து பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை சற்றும் கடுமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் இவர் அப்தாபிற்கு செலவிற்குப் பணம் தருவதில் கராராக இருந்துள்ளார். இளைஞரான நதீமிற்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ஊர் சுற்றுவது போன்ற விஷயங்களுக்குச் செலவு செய்யப் பணமில்லை.

இதனால் என்னசெய்வது தெரியாமல் தவித்த நதீமிற்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. அதன்படி நதீம் தன் நண்பர் அப்தாப் உடன் சேர்ந்து ஒரு கடத்தல் நாடகமாடத் தீர்மானித்தார். தன் வீட்டிலிருந்து வெளியே வந்த நதீம் தன் நண்பர் அமிதாப்பிடம் சொல்லி, நதீமின் தந்தைக்கு போன் செய்து, அவர்கள் நதீமை கடத்திவிட்டதாகவும், ரூ2 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவனை விடுவிப்பதாகவும் கூறும்படி கூறியுள்ளார். அமிதாப் அப்படியே நதீமின் தந்தையை பேன் செய்து மிரட்ட , அதில் பயந்து போன நதீமின் தந்தை போலீசிடம் சென்றுள்ளார்.

இந்த புகார் வந்ததும் போலீசார் உஷாராகி நதீம் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில் நதீமின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அவர் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் நேரத்திற்குப் பின்பு அவரது செல்போனிலிருந்து ஒரு பெண்ணிற்கு போன் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுபேசிய போது, அந்த பெண் நதீமின் காதலி என்றும், நதீம் அவனது நண்பன் அப்தாப் உடன் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்தாப்பை போலீசார் தொடர்பு கொள்ள முயன்ற போது அப்தாபையும் காணவில்லை என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் டில்லி ஜமாய்யா நகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடமிருந்து செல்போனை இரண்டு இளைஞர்கள் பறித்துச் சென்றதாகத் தனியாகப் புகார் வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நதீம், மற்றும் அப்தாப் தான் அந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், பறிக்கப்பட்ட செல்போனை வைத்தே நதீமின் தந்தையை அப்தாப் மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்களுக்கு இந்த யோசனை ஆன்லைன் வெப் சீரிஸான “ப்ரீத் : இன்டு தி ஸாடோஸ்” என்ற வெப் சீரிஸின் காட்சிகளை வைத்தே தங்களுக்கு இந்த யோசனை வந்ததாகத் தெரிவித்தனர். செலவுக்குக் காசு தராததால் வெப் சீரிஸ் காட்சிகளைப் போலத் தன்னை கடத்திவிட்டதாக மகனே ஆளை வைத்து தந்தையை ஏமாற்ற முயன்ற சம்பவம் வெளியில் வந்துள்ளது. தற்போது போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 9

0

0