குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை 10 நாட்களில் தொடங்கும்..! நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்..!

18 May 2021, 8:25 pm
VK_Paul_Niti_Aayog_UpdateNews360
Quick Share

2-18 வயதுக்குட்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சினின் மருத்துவ பரிசோதனைகள் அடுத்த 10-12 நாட்களில் தொடங்கும் என்று மத்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை / மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிய சில நாட்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இரண்டாம் கட்டம் / மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு கோவாக்சின் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த 10-12 நாட்களில் சோதனைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.” என நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் 2 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள முன்மொழிந்தது. சோதனையில், தடுப்பூசி 0 மற்றும் 28 வது நாளில் என பெரியவர்களுக்கு வழங்குவதைப் போல் இரண்டு டோஸ்களில் தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்காக 525 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள கோவாக்சின், இந்தியாவின் தற்போதைய கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 113

0

0