ஆக.15ல் கொரோனா தடுப்பூசி வருமா…? அதிரடியாக வெளியான டுவிஸ்ட் தகவல்

10 August 2020, 8:42 pm
covaxin - updatenews360
Quick Share

ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் பாரத் பயோடெக். இந்த நிறுவனமானது ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தொற்றை ஒழிக்க ‛கோவாச்கின்’ என்ற பெயரில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது.

இந்த தடுப்பூசி வரும் 15ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவித்து இருந்தது. தடுப்பூசியானது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகையால், பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்டவில்லை என்று பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. அதாவது, இம்மாதம் 15ம் தேதி தடுப்பூசி அறிமுகம் இல்லை என்று பாரத் பயோடெக் அறிவித்து இருக்கிறது.

இது குறித்து அதன் இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ண எல்லா கூறி உள்ளதாவது: எங்களுக்கு பாதுகாப்பும், தரமும் முக்கியம். தடுப்பூசி தயாரிப்பில் உலகளவில் அனைத்து தரப்பினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறோம்.

ஆகையால் சிறந்த, தரமான தடுப்பூசியை உருவாக்குவோம். இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்களால் தரமான, விலை குறைந்த தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். இது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. ரோட்டா வைரஸ் தடுப்பூசியை ஒரு டாலருக்கு அறிமுகப்படுத்தியதும் பாரத் பயோடெக் நிறுவனம் தான் என்று கூறினார்.