கொரோனா தடுப்பூசி போட்டால் தங்க மூக்குத்தி! எங்கு தெரியுமா?

6 April 2021, 2:44 pm
Quick Share

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு, தங்க மூக்குத்தி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி அசத்தி வருகிறது தங்க நகை செய்வோர் அமைப்பு ஒன்று. குஜ்ராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த பெண்களுக்கு இந்த அசத்தல் சலுகை கிடைத்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஓராண்டாக பரவி வந்த கொரோனா வைரஸ், சில மாதங்களுக்கு முன் கட்டுக்குள் வந்தது. மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கை வாழத் துவங்க, மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தால், கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த அமைப்பு ஒன்று அங்குள்ள பெண்களுக்கு அசத்தல் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை, சூரத், ராஜ்காட், வதோதரா, ஆமதாபாத் ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தற்போது போடப்பட்டு வருகிறது. ராஜ்கோட்டை சேர்ந்த தங்க நகை செய்வோர் அமைப்பு ஒன்று, அங்கிருக்கும் பெண்களுக்கு, கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தடுப்பூசி முகாம் ஒன்றில், கொரோனா தடுப்பூசி போடும் ஆண்களுக்கு பல்வேறு கிப்ட்களை கொடுத்து அசத்தும் இந்த அமைப்பு, பெண்களுக்கு தங்க மூக்குத்திகளை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இதுகுறித்து அந்த அமைப்பை சார்ந்தவர்கள் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை, மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதறக்காக ஆண்களுக்கு கிப்ட்களும், பெண்களுக்கு தங்க மூக்குத்தியும் வழங்கி வருகிறோம்’ என்றனர். சூப்பர்ல..!

Views: - 51

0

0