மக்கள் செத்து மடிவதைத்தான் காங்கிரஸ் விரும்புகிறதா..? எதிர்ப்புகளால் ஜகா வாங்கிய காங்கிரஸ்..!

3 January 2021, 5:26 pm
tharoor_modi_corona_vaccine_updatenews360
Quick Share

பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியை நிபந்தனை அடிப்படையில் அவசரகால பயன்பாட்டிற்கு டிசிஜிஐ அனுமதி வழங்குவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கவலைகளை எழுப்பிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததால் விஞ்ஞான சமூகம் மற்றும் விஞ்ஞானிகள் மீது காங்கிரஸுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அவர்கள் பரிந்துரைத்ததை நாங்கள் பின்பற்றுவோம். ஆனால் சிறந்த தடுப்பூசி மட்டுமே இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மீது எங்களுக்கு அவநம்பிக்கை துளியும் இல்லை.” என காங்கிரஸ் தரப்பில், மூத்த தலைவர்களின் கருத்துக்களை மறுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா மற்றும் சஷி தரூர் ஆகியோர், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பது ஆபத்தானது எனக் கூறியிருந்தனர்.

தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து எதிர்மறையான அறிக்கைகள் குறித்து பதிலளித்த பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியா, காங்கிரஸ் கட்சி மிக மோசமான பயமுறுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

“கொரோனா தடுப்பூசி தொடர்பாக இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மிக மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் இது முதல் தடவையல்ல. போலியோ எதிர்ப்பு இயக்கத்தின் போதும் இதேபோன்ற மோசமான பிரச்சாரங்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.

ஆனால் கொரோனா போலியோவைப் போலல்லாமல், மிகவும் ஆபத்தானது. எதிர்க்கட்சி அதிகமான மக்கள் இறந்துபோக விரும்புகிறதா?” என அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியதற்காக எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Views: - 0

0

0