ஆதார் பூனவல்லா ஒரு கொள்ளைக்காரன்..! சீரம் நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்..! பாஜக எம்எல்ஏ கொந்தளிப்பு..!

22 April 2021, 8:47 pm
adar_poonawalla_updatenews360
Quick Share

கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) கொரோனா தடுப்பூசியை விலை நிர்ணயம் செய்ததில் வருத்தமடைந்த உத்தரபிரதேச பாஜகவின் கோரக்பூர் எம்எல்ஏ ராதா மோகன் தாஸ் அகர்வால் எஸ்ஐஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லாவை கொள்ளையன் என்று கூறி, தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“ஆதார் பூனவல்லா நீங்கள் ஒரு கொள்ளைக்காரரை விட மோசமானவர். உங்கள் தொழிற்சாலையை தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்த வேண்டும்” என்று எம்.எல்.ஏ பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனை குறிப்பிட்டு ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

கோவிஷீல்ட் ஒரு டோஸை தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாக்கும், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸை 400 ரூபாக்கும் வழங்குவதாக எஸ்ஐஐ அறிவித்ததை அடுத்து, டாக்டராக இருக்கும் பாஜக எம்எல்ஏ இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மே 1 முதல் கொரோனா தடுப்பூசியின் தாராளமயமாக்கப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கட்டம் 3 மூலோபாயத்தை மத்திய அரசு அறிவித்த பின்னர் சீரம் நிறுவனம் விலைகளை அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி பெற தகுதி கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்தது.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசிற்கும் திறந்த சந்தையிலும் முன்பே அறிவிக்கப்பட்ட விலையில் வெளியிட அரசாங்கம் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 369

0

0