கடவுள் கண்ணை திறந்துட்டாரு – ஒரே நாளில் கோடீஸ்வரி ஆன குடும்பத்தலைவி

26 February 2021, 11:19 am
Quick Share

அமிர்தசரஸில், லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு வென்ற குடும்பத்தலைவி, ஒரே நாளில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், அம்மாநில அரசே, லாட்டரி விற்பனை செய்து வருகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு, லாட்டரி டிக்கெட் விற்பனையின் மூலமும் வருமானம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி, அமிர்தசரஸை சேர்நத ரேணு சவுகான் என்ற பெண்மணி, ரூ.100 மதிப்புள்ள D-12228 என்ற எண் கொண்ட  லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளார். அன்றைய தின லாட்டரி டிக்கெட் குலுக்கல் முடிவுகளை பஞ்சாப் மாநில லாட்டரி விற்பனை துறை, தற்போது வெளியிட்டு இருக்கிறது.


குலுக்கல் முடிவில், ரேணு சவுகான் வாங்கிய டிக்கெட்டிற்கு, முதல் பரிசாக ரூ. 1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த டிக்கெட்டை வாங்கியவர்கள், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, மாநில லாட்டரி விற்பனை துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ரூ. 1 கோடி பரிசு விழுந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்த ரேணு சவுகான், தங்கள் அடைந்த கஷ்டத்திற்கு, கடவுள் தற்போது கண்ணை திறந்து உள்ளார்.


துணி வியாபாரம் செய்து வரும் தனது கணவர்,இந்த பரிசுத்தொகையை கொண்டு வர்த்தகத்தை விரிவுபடுத்துவார். நடுத்தர வர்க்கத்தினரை சேர்ந்த தங்களுக்கு இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளதாக ரேணு சவுகான் தெரிவித்து உள்ளார்.

Views: - 10

0

0