“தாய் நாட்டிற்காக சேவை செய்யவே சீறுடை அணிந்தேன்” – துணிச்சலுக்கான பதக்கத்தை 7வது முறையாக பெற்ற சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்.

15 August 2020, 10:16 am
Quick Share

சிஆர்பிஎஃப் வீரர் நரேஷ் குமார், 4 ஆண்டுகளில் துணிச்சலுக்கான பதக்கத்தை 7-வது முறையாக பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷ்ஹியார்பூரை சேர்ந்தவர் நரேஷ் குமார். கடந்த 2017-ஆம் ஆண்டு அவருக்கு துணிச்சலுக்கான முதல் பதக்கம் வழங்கப்பட்டது. சிஆர்பிஎஃப் படையை சேர்ந்த இவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மத்திய படையின் விரைவான நடவடிக்கை குழுவின் தலைவராக உள்ளார்.

தைரியமும், தந்திரம் மிக்க புத்தி கூர்மையும் கொண்ட இவர், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் தடல்புடலாக நடவடிக்கை எடுத்து தனது பணியை நாட்டிற்காக சிறப்பாக செய்து வருகிறார்.

இவர் தலைவராக உள்ள இந்த படைக்கு இதுவரை துணிச்சலுக்கான 55 பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 41 பதக்கங்கள் ஜம்மு காஷ்மீர் எல்லை பிரச்னை நடவடிக்கைகளுக்காகவும், 14 சத்தூஸ்கர் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அவர் தற்போது துணிச்சலுக்கான 7வது பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார். இந்த பதக்கம் கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகே பாதுகாப்பு படை முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் மேற்கொண்ட யுக்திபூர்வமான நடவடிக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் பேசியபோது, தாம் இந்த சீறுடை அணிந்தது நாட்டிற்காக சேவை செய்யத்தான் எனவும், தொடர்ந்து எனது பணியை சிறப்பாக செய்வேன் எனவும் கூறினார்.

Views: - 35

0

0