ஊழியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை..! சிஆர்பிஎஃப் அதிரடி உத்தரவு..!

3 September 2020, 2:24 pm
Smartphone_Updatenews360
Quick Share

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தனது வீரர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தரவுகளை சேமித்து பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை சென்சிட்டிவான பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கிறது. சிஆர்பிஎப்பின் புதிய வழிகாட்டுதல்கள் ஜவான்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

விதிமீறி யாராவது ஒரு ஸ்மார்ட்போனை அலுவலகத்திற்கு கொண்டு வந்தால், அது ஒரு குறிப்பிட்ட கவுண்டரில் வைக்கப்படும்.

“நிறுவனத்தில் ஸ்மார்ட்போன் வழிகாட்டுதலின் அடிப்படை நோக்கம் படையில் தகவல் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்களை வரையறுப்பதாகும். தகவல் பாதுகாப்பின் அடிப்படைக் கொள்கைகள் இரகசியத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவை ஆகும்” என்று சிஆர்பிஎஃப் அதன் வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும், “தகவல் பாதுகாப்பு திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும், ஒரு நிறுவனத்தால் வைக்கப்படும் ஒவ்வொரு பாதுகாப்புக் கட்டுப்பாடும் பணியில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை கோடிட்டுக்காட்டுகின்றன. அதிகப்படியான கட்டுப்பாடற்ற செயலி பாதுகாப்பு மீறலுக்கு வழிவகுக்கும்.” என்று மேலும் தெரிவித்துள்ளது.

சிஆர்பிஎஃப் கேமராக்கள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பதிவு செய்யும் வசதிகளின் அடிப்படையில் தொலைபேசிகளை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் போன்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. மேலும் தனது பணியிடங்களை உயர், நடுத்தர மற்றும் குறைந்த சென்சிட்டிவ் பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளது.

சமூக ஊடக பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களில், சமூக வலை தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களில் அவர்கள் இடுகையிடும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று அரசாங்க அதிகாரிகள் உணர வேண்டும் என்று சிஆர்பிஎஃப் கூறியுள்ளது.

Views: - 7

0

0