பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை ஆற்றில் வீசிய கொடூர தந்தை : கேரளாவில் பயங்கரம்!!

25 September 2020, 6:30 pm
FB Love Murder - updatenews360
Quick Share

காதல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையை ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமாங்காடு பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் திருவல்லம் பாச்சலூர் பகுதியை சேர்ந்த பெண்ணணுடன் முகநூலில் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது.

காதலுக்குதான் கண்ணில்லையே, நட்பு காதலாக மாறியதும் இருவரும் நெருக்கமாக பழகினர். இதையடுத்து அந்தப் பெண் கர்ப்பமானார். இதனால் பயந்து போன பெண், திருமணம் செய்து கொள்ள உன்னிகிருஷ்ணனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார்,

இதையடுத்து வீட்டில் நடந்ததை பெண் கூற, உடனே காவல்நிலையத்திற்கு சென்று உன்னிகிருஷ்ணன் மீது புகார் அளித்தனர். புகாரையடுத்து இருவரையும் அழைத்து சமரசம் பேசிய போலீசார்இ திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் 40 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பெண் வீட்டார் கேரள வழக்கப்படி குழந்தைக்கு பாச்சலூரில் நூல் கட்டும் வைபோகம் நடத்தினர். இதையடுத்து அன்று மாலை குழந்தையை தூக்கி கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தையை பெற்றோரிடம் காண்பித்து வருகிறேன் எனக் கூறி சென்ற உன்னிகிருஷ்ணன், திரும்பி வரவேயில்லை.

இதையடுத்து பெண் வீட்டாரும், காதல் மனைவியும் வெகுநேரம் உன்னிகிருஷ்ணனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. இதையடுத்து பெண்ணின் வீட்டார் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உன்னிகிருஷ்ணன் குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு ஆற்றில் வீசியது தெரியவந்தது.

இதனிடையே உன்னிகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவனிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கொன்றது ஒப்புக்கொண்டான். காதல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமா குழந்தையை கொன்றதாக அந்த நயவஞ்சகன் கூறியுள்ளான். பின்னர் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தை மூன்று மணி நேரமாக தேடி மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பட்டது.

Views: - 10

0

0