“என் நெஞ்சைப் பிளந்தால் உள்ளே மோடி தான் இருப்பார்”..! பாஜகவுக்கு ஐஸ் வைக்கும் சிராக் பஸ்வான்..!

Author: Sekar
16 October 2020, 8:39 pm
chirag_paswan_modi_updatenews360
Quick Share

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தன்னை பிரதமர் நரேந்திர மோடியின் அனுமன் என்று வர்ணித்துக் கொண்டது பீகார் அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிதீஷ் குமாரை பீகார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கபப்ட்டதால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறியதிலிருந்து, பாஜகவால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், சிராக் பஸ்வான் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் தேவையில்லை என்று கூறினார்.

“பிரதமர் மோடியின் புகைப்படங்கள் எனக்குத் தேவையில்லை. அவர் என் இதயத்தில் இருக்கிறார். ராமர் மீதான அனுமனின் பக்தியைப் போலவே, நீங்கள் என் இதயத்தைத் திறந்தால் மோடி ஜி மட்டுமே இருப்பார்” என்று அவர் கூறினார்.

தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலமும், அதே சமயத்தில் பாஜகவுக்கு ஆதரவை அறிவிப்பதன் மூலமும் 37 வயதான சிராக் பஸ்வான் பாஜகவின் கோபத்தை எதிர்கொள்கிறார்.

முந்தைய நாள், சிராக் பஸ்வான் அளித்த ஒரு பேட்டியில் நிதீஷ் மீண்டும் முதல்வராக பதவியேற்க மாட்டார் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைத்து தனது கட்சி மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 43

0

0