சுரேஷ் பய்யாஜி பதவி விலகல்..! ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு..!

Author: Sekar
20 March 2021, 4:58 pm
dattatreya_hosabale_updatenews360
Quick Share

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அடுத்த சர்கார்யாவாக (பொதுச் செயலாளராக) தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்ந்தெடுக்கப்பட்டார். 65 வயதான சுரேஷ் பய்யாஜி ஜோஷி கடந்த 2009 முதல் 12 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்து சாதனை படைத்த நிலையில் தற்போது பொதுச்செயலாளர் பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதவி மாற்றத்தை உறுதிப்படுத்தியது. பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபையில் இதற்கான தேர்தல் நடந்ததுள்ளது.

சர்கார்யாவா பதவி தற்போது மோகன் பகவத் வசம் உள்ள சர்சங்க்சலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) பதவிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பர் 2 பதவியாகக் கருதப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்கார்யாவாவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, தத்தாத்ரேயா ஹிசாபலே அமைப்பின் சா-சரகார்யாவா (இணை பொதுச் செயலாளர்) இருந்தார்.

தத்தாத்ரேயா ஹோசாபலே கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சோராபில் எனும் பகுதியில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், 1968’இல் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் பின்னர் 1972’இல் ஏ.பி.வி.பியிலும் சேர்ந்தார். 1978’இல் அவர் ஒரு முழு நேர பிரச்சாரக் ஆக ஆனார்.

1975 முதல் 1977 வரையிலான இந்திய அவசர நிலை காலங்களில், உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.

தத்தாத்ரேயா ஹோசபாலே 2003 முதல் 2009 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் பவுதிக் பிரமுகும், 2009 முதல் சா-சஹ்கார்யாவாவும் இருந்து வருகிறார்.

Views: - 96

0

0