75 வயது மாமனாருக்கு கொரோனா தொற்று: மகளாக மாறிய மருமகள்…தோளில் சுமந்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம்..!!

5 June 2021, 2:01 pm
Quick Share

புவனேஸ்வர்: கொரோனா பாதிக்கப்பட்ட மாமனாரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்பவர் வெளியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிகாரிகா, கணவன் வெளியூரில் உள்ளதால் கிராமத்தில் உள்ள சூரஜ்ஜின் வீட்டில் நிகாரிகா வசித்து வருகிறார்.

75 வயதாகும் சூரஜ்ஜின் தந்தை துலேஸ்வர் தாஸ் மற்றும் மருமகள் நிகாரிகா 2 பேரும்தான் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு துலேஸ்வருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் டெஸ்ட் எடுக்கப்பட்டதில், அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை கேட்டதும் நிகாரிகா கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்களுக்கும், வேறு வண்டிகளுக்கும் காத்திருக்காமல், வேறு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல் வயதான மாமனாரை முதுகில் தூக்கி வைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றார். சாலையில், இதை பார்த்த பலரும் வியப்புற்றனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நிகாரிகாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..

நிகாரிகாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 231

0

0