தாதா தாவூத்தின் நிலைமை இப்படி ஆகிடுச்சே..! டெல்லி போலீஸ் வெளியிட்ட சீக்ரெட் தகவல்

3 December 2019, 11:14 am
Quick Share

டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 3 ஆண்டுகளாக போனை பயன்படுத்தாமல் இருப்பதாக டெல்லி போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு, காஷ்மீர் பயங்கரவாதம் என இந்தியாவுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருபவர் தாவூத் இப்ராகிம். நிழலுலக தாதாவாக அறியப்படும் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது.

பாகிஸ்தானில் இருப்பதாகவும், அரபு நாடுகளில் ஒளிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாவது உண்டு. தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இதயக்கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அதனால் பேச முடியாத நிலையில் இருக்கிறார் என்றும் கூட செய்திகள் பரவின. ஆனால் அவரது சகோதரர் அனிஸ் இப்ராகிம் அதை எல்லாம் மறுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தாவூத் இப்ராகிம் தொலைபேசியை பயன்படுத்தி 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக டெல்லி போலீசார் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீசார் கூறி இருப்பதாவது: கடைசியாக நவம்பர் 2016ம் ஆண்டு அவரது (தாவூத் இப்ராகிம்) தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது. அப்போது தாவூத்தின் குரலில் உளறல் இருந்தது.

 அனேகமாக அத்தருணத்தில் அவர் குடித்திருக்கக்கூடும். தனிப்பட்ட முறையில் அவரது உரையாடல் இருந்தது. வேறு ஏதாவது சதித்திட்டம் தீட்டுவது போன்று அந்த உரையாடல் இல்லை என்று கூறினர்.

பொதுவாக இதுபோன்ற உளவு தகவல்கள் ரா அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். தாவூத்தின் குரல், உரையாடல் பற்றி டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் நன்கு அறிந்தவர்.

அவர் கூறி இருப்பதாவது: ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையின்போது நாங்கள் தாவூத்தின் குரலை கேட்டிருக்கிறோம். 2016ம் ஆண்டு அவரது போன் உரையாடல் பற்றி கருத்துக் கூறமுடியாது. ஆனால், டெல்லி போலீசில் அவரை பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன.

போன் உரையாடலை அவர் தவிர்த்திருக்கலாம். அதற்காக கராச்சியில் இருந்து இடம்மாறி விட்டார் என்று கூற முடியாது. பாகிஸ்தானில் இருந்து அவரும், அவரது கூட்டாளிகளும் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

1 thought on “தாதா தாவூத்தின் நிலைமை இப்படி ஆகிடுச்சே..! டெல்லி போலீஸ் வெளியிட்ட சீக்ரெட் தகவல்

Comments are closed.