இடத்தை விற்க ஒரு லட்சம் லஞ்சம்..! டெல்லி அதிகாரிகளை பொறி வைத்துப் பிடித்தது சிபிஐ..!

15 August 2020, 3:11 pm
aRREST_uPDATEnEWS360
Quick Share

லஞ்சம் தொடர்பாக டெல்லி அபிவிருத்தி ஆணையத்தின் (டி.டி.ஏ) உதவி இயக்குநர் உட்பட மூன்று அதிகாரிகளை மத்திய புலனாய்வுத் துறை இன்று அதிரடியாக கைது செய்துள்ளது.

ரூ 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஒரு உதவி இயக்குனர், ஒரு எழுத்தர் மற்றும் ஒரு பாதுகாப்புக் காவலர் சிபிஐ’யால் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி இயக்குநர் சுதன்ஷு ரஞ்சன் எனவும் எழுத்தர் அஜீத் பரத்வாஜ் மற்றும் பாதுகாப்புக் காவலரின் பெயர் தர்வான் சிங் எனக் கூறப்படுகிறது.

டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் இடம் ஒதுக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வாங்கிய இடத்தை விற்க விரும்பிய நபர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகார்தாரருக்குத் தெரிந்த அந்த நபர், தனது சேரியில், டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் இருந்து இடம் பெற்றுள்ளார். இந்த இடத்தை விற்க ரூ 4 லட்சம் லஞ்சம் கொடுக்குமாறு அதிகாரிகள் கேட்டதாக புகார் கொடுக்கப்பட்டது.

புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர் சிபிஐ திட்டமிட்டு, லஞ்சத்தின் ஒரு பகுதியாக ரூ 1 லட்சத்தை ஏற்றுக்கொண்டபோது, அரசு ஊழியரை கையும் களவுமாக பிடித்தது. இதனையடுத்து மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

“டெல்லி மற்றும் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் தேடல்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் குற்றச்சாட்டுக்கு தேவையான ஆவணங்களை மீட்டெடுக்க முடிந்தது” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குற்றவாளி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் நடக்கும் ஊழல் குறித்து விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Views: - 42

0

0