தலைவிரித்தாடும் வரதட்சணை கொடுமை: கணவனால் ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண் பலி…ம.பி.யில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 4:55 pm
Quick Share

புதுடெல்லி: வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த பெண் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட குவாலியரைச் சேர்ந்த இந்த பெண் 50 நாட்களுக்கு மேல் உயிருக்கு போராடிய நிலையில், வியாழக்கிழமை இரவு டெல்லி மருத்துவமனையில் இறந்தார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சசி ஜாதவ் ஒரு வீடியோ செய்தியை பதிவு செய்தார்.

அந்த வீடியோவில் தனது மரணத்திற்கு காரணமான “யாரையும் விட்டுவிடாதீர்கள்” என்று போலீசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜூன் 27 அன்று தனது கணவர் வீரேந்திர ஜாதவ் தனது பெற்றோரிடமிருந்து ரூ.3 லட்சம் வரதட்சணையை வாங்கி வரச் சொன்னதாக குற்றம் சாட்டினார்.

வரதட்சணை கொடுக்க முடியாததால் வீரேந்திர ஜாதவ், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜூன் 28ம் தேதி அன்று தன்னை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைத்தனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதலில் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசி ஜாதவின் உடல் நிலை மோசமடைந்ததால் டெல்லி மருத்துவமனைக்கு சசி மாற்றப்பட்டார். இது தொடர்பாக கொலைவழக்கு மற்றும் வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

Views: - 262

1

0