போதைப் பொருள் வாங்க வாட்ஸ் அப்பில் CODE WORD! விசாரணையில் சிக்கும் பிரபல பாலிவுட் நடிகை?

23 September 2020, 11:17 am
Deepika- updatenews360
Quick Share

போதைப்பொருள் விவகாரம் இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் துவங்கிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. சுஷாந்த் வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக போதைப் பொருள் விவகாரத்தில் நடிகைகள் பலர் கைதாகினர். பாலிவுட்டில் சுஷாந்த் காதலி ரியாவை தொடர்ந்து பல நடிகையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே போல கன்னட திரையுலகில் நடிகை சஞ்சனா கல்ராணி, டிவி நடிகை அனிகா கைது செய்யப்பட்டனர்.

தற்போது கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைதான டிவி நடிகை அனிகாவிடம் இந்தி நடிகை தீபிகா படுகோனே போதைப் பொருள் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பானஸ்வாடியில் கைதான அனிகாவுடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வாட்ஸ் ஆப் சேட்டிங்க மூலம் தொடர்பு கொண்டு தீபிகா போதை பொருள் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Deepika padukone drug angle Kangana Ranaut Sushant Singh Rajput

அதுவும், வாட்ஸ் அப்பில் போதைப் பொருள் வாங்க Code word பயன்படுத்தியதாகவும், இதில் டி என்றால் தீபிகா, எஸ் என்றால் ஸ்ரதா கர், என் என்றால் ஹர்ஷா நம்ரதா, ஜேகே என்றால் ஜெயா சாஹா எனவும் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக இந்திய திரையுலகத்தினர் பல்வேறு நடிகர் நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாலிவுட்டையே கலக்கி வரும் தீபிகா படுகோனே போதைப்பொருள் வாங்கியதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MLA Manjinder Sirsa Accuses Deepika Padukone, Vicky Kaushal And Others of  Taking Drugs at Karan Johar's Party | India.com