5 மாநில தேர்தல் தோல்வி: அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் அவசர ஆலோசனை..!!

Author: Rajesh
11 March 2022, 9:49 pm
Quick Share

புதுடெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று திடீரென ஆலோசனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று திடீரென ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல், மனிஷ் திவாரி ஆகியோர் பங்கேற்றனர். ஆனந்த் சர்மாவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் 4 தலைவர்களும் ஏற்கனவே, கட்சித் தலைமைக்கு கூட்டாக கடிதம் எழுதியிருந்தவர்களின் முக்கியமானவர்கள் ஆவர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய வேண்டும் முழு நேர தலைவரை கட்சிக்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சோனியா காந்திக்கு 23 மூத்த தலைவர்கள் அனுப்பியிருந்தனர். இதில், மேற்கூறிய 4 பேரும் முக்கியமானவர்கள் ஆவர்.

Views: - 695

0

0