பாதுகாப்புத் துறை பட்ஜெட் 19% சதவீதம் அதிகரிப்பு..! சிறப்பு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு..!

1 February 2021, 2:35 pm
Indian_Army_Tank_UpdateNews360
Quick Share

2021-22’க்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ 4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தார். இதில் ரூ 1.35 லட்சம் கோடி மதிப்புள்ள மூலதன செலவும் அடங்கும்.

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தமைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தார்.

“பாதுகாப்பு பட்ஜெட்டை ரூ 1.35 லட்சம் கோடி மதிப்புள்ள மூலதன செலவினங்களை உள்ளடக்கிய நிதியாண்டு 21-22’க்கான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை 4.78 லட்சம் கோடியாக உயர்த்தியதற்கு நான் பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி கூறுகிறேன். இது பாதுகாப்பு மூலதன செலவினங்களில் கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகரிப்பு ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் இது தான் மிகப்பெரிய அதிகரிப்பு.” என்று ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் மற்றும் பாகிஸ்தானுடனான மோதல் போன்ற மிகவும் சிக்கலான நேரத்தில், பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு தேவை எனும் கூற்று பாதுகாப்பு வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டு வந்த சூழல் தற்போது அதை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் தனது அரசாங்கத்தின் பட்ஜெட் 2021-22’ஐ பாராட்டியதோடு, இது நல்லாட்சியின் ஆறு தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.

“பொருளாதார சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், மூலதன உருவாக்கம் மற்றும் இந்தியாவில் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சியின் 6 தூண்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் இந்தியாவை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும்” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Views: - 0

0

0