‘பட்டாசுகளுக்கு மீண்டும் தடை’: டெல்லியில் தீபாவளிக்கு 4வது ஆண்டாக தொடரும் கட்டுப்பாடுகள்…முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!!

By: Aarthi
15 September 2021, 3:39 pm
Quick Share

புதுடெல்லி: காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காற்று மாசுபடுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதால் மீண்டும் காற்று மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதன் காரணமாக, டெல்லியில் தீபாவளி அன்று பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் கூறுகையில், டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக கடந்தாண்டை போலவே தீபாவளிக்கு பட்டாசு சேமிக்கவும், விற்கவும், வெடிக்கவும் இந்தாண்டும் தடை விதிக்கப்படுகிறது.

அப்போது தான் மக்களின் உயிரை பாதுகாக்க முடியும். கடந்தாண்டு பட்டாசு வியாபாரிகள் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டதால் பலர் நஷ்டமடைந்தனர். அதனால் இந்த ஆண்டு யாரும் பட்டாசுகளை சேமித்து வைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன் என கூறியுள்ளார். டெல்லியில் தொடர்ந்து 4வது ஆண்டாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 160

0

0