முதல்வரின் மகளிடமே ஆட்டையை போட்ட பலே திருடர்கள்! எவ்வளது தொகை தெரியுமா?

9 February 2021, 12:35 pm
Quick Share

பழைய சோபாவை ஓ.எல்.எக்ஸ்.சில் விற்க முயன்ற, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம், ஆன்லைன் மோசடி கும்பல் 34 ஆயிரம் ரூபாயை ஆட்டையை போட்டனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் அளித்துள்ளார். முதல்வரின் மகளுக்கே இந்த நிலைமையா?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் தனது வீட்டில் இருந்த பழைய சோபாவை பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ்.சில் விற்பனை செய்ய முடிவு செய்து, புகைப்படத்தையும், தனது தகவலையும் பகிர்ந்திருக்கிறார். புரொபைலை பார்த்துவிட்டு, சோபா தனக்கு வேண்டும் என ஒருவர் ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டிருக்கிறார். கால் செய்த நபர் சைபர் மோசடி கும்பலை சேர்ந்தவர் என தெரியாத ஹர்ஷிதாவும், தனது வங்கி கணக்கு விவரங்களை அளித்திருக்கிறார்.

பின் அவரது மொபைல் எண்ணுக்கு ஒரு கியூ.ஆர் கோடு (QR code) அனுப்பி, அதனை ஸ்கேன் செய்யுங்கள், வங்கி கணக்குக்கு சோபாவுக்கு உரிய பணத்தை அனுப்பி விடுகிறேன் என தெரிவித்திருக்கிறார் அந்த ஏமாற்று பேர்வழி. ஹர்ஷிதாவும் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்ய, பணம் போடுவதுக்கு பதில், பணத்தை சுருட்டியிருக்கிறார் அந்த நபர். ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்ஷிதா, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள டெல்லி சிவில் லைன் காவல்துறை, விசாரணையை துவக்கி உள்ளது. முதல்வர் மகளிடமே சைபர் மோசடி கும்பல் கைவரிசை காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1

0

0

1 thought on “முதல்வரின் மகளிடமே ஆட்டையை போட்ட பலே திருடர்கள்! எவ்வளது தொகை தெரியுமா?

Comments are closed.