ஒரே மருத்துவமனையிலிருந்து 23 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்..! டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விசாரணைக்கு உத்தரவு..!

9 May 2021, 9:22 pm
manish_sisodia_updatenews360
Quick Share

வட டெல்லி மாநகராட்சியில் இயங்கும் இந்து ராவ் மருத்துவமனையில் 23 கொரோனா நோயாளிகள் காணாமல் போயுள்ள சம்பவம் குறித்து விசாரணைக்கு துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தி நாளை மாலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிசோடியா சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநகராட்சியின் மேயர் ஜெய் பிரகாஷ் நேற்று, ஏப்ரல் 23 முதல் மே 6 வரை குறைந்தது 23 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிடம் தெரிவிக்காமல் மருத்துவமனையை விட்டு வெளியேறினர் என்று கூறியிருந்தார். அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து காணாமல் போயுள்ளனர் என்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று சிசோடியா கூறினார்.

இது இந்த நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தானது மட்டுமல்லாமல், நோய் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கை விதித்துள்ள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு என்றும் துணை முதலமைச்சர் கூறினார்.

வட டெல்லி மாநகராட்சியால் நடத்தப்படும் இந்து ராவ் மருத்துவமனை, தேசிய தலைநகரில் உள்ள மிகப்பெரிய குடிமை மருத்துவமனையாகும்.

இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லி கொரோனா செயலியின் படி, தற்போது இங்கு அனைத்து படுக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 148

0

0