விவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..! இன்றைய நிலவரம் என்ன..?

27 January 2021, 1:49 pm
tractor_march_violence_UpdateNews360
Quick Share

டெல்லியில் நேற்று குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை முதலே, விவசாயிகள் அத்துமீறி, டெல்லிக்குள் ஆயுதங்களோடு புகுந்து, செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டத்தை ஆடி விட்டனர்.

அப்போது நடந்த கலவரங்களில், டிராக்டர் கவிழ்ந்து விவசாயிகள் தரப்பில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் போலீஸ் தரப்பில் 300’க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த கலவரத்தால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பல பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கலவளரத்திற்கு பின், இன்று டெல்லியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கலவரத்தை முன்பே திட்டமிட்ட வேளாண் அமைப்பு ?

இன்று காலை பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட், சமூக விரோதிகள் டிராக்டர் பேரணிக்குள் புகுந்து விட்டதாகவும், அவர்களே கலவரத்திற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே, ஜனவரி 25 அன்று அவர் விவசாயிகளிடையே பேசும்போது, பேரணிக்கு லத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வருமாறு கூறும் வீடியோ வெளியாகி அவரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சில விவசாயத் தலைவர்கள் பேரணியை கலவரமாக மாற்ற முன்கூட்டியே திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

கலவரக்காரர்கள் மீது எப்ஐஆர் :

நேற்றைய கலவரத்தின் போது வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது, காவலர்களை தாக்கியது போன்ற புகார்களுக்காக டெல்லியில் 22 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறை நடந்த பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை இன்று டெல்லி காவல்துறை கைப்பற்றி, கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது. மேலும் டெல்லி போலீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 300’க்கும் மேற்பட்டவர்கள் இந்த வன்முறையால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

144 தடையுத்தரவு, இணைய சேவைகள் முடக்கம் :

வன்முறை வெறியாட்டத்தை முடித்த பிறகு, விவசாயிகள் பலர் மீண்டும் எல்லையில் முன்பு இருந்த இடங்களுக்கே திரும்பினாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் டெல்லியின் மையப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 29 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில், பாதுகாப்பை முன்வைத்து, டெல்லியில் பிப்ரவரி 15 வரை 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியின் பல பகுதிகள் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 

செங்கோட்டை, டெல்லி எல்லைப் புள்ளிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் அமைப்புகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு :

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பின் போது ஏற்பட்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகளின் கூட்டு குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சா இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒரு கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு முன்பு, 32 புதிய பஞ்சாப் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான சிங்கு எல்லையில் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“காவலரத்தில் ஈடுபட்டது மஜ்தூர் கிசான் சங்கதன் அமைப்பே..” 

மஜ்தூர் கிசான் சங்கதன் என்ற பெயரில் ஒரு சிறிய குழு பற்றி நாங்கள் ஏற்கனவே போலீசாருக்கு தகவல் கொடுத்திருப்பதாகவும், அவர்கள் பேரணியில் கலந்து கொள்ளாமல் செங்கோட்டைக்குச் சென்றதாக அகில இந்திய கிசான் சபா ஹன்னா மொல்லா கூறினார்.

டெல்லி போலீசாரின் குடும்பங்கள் போராட்டம் :

ஐ.டி.ஓ பகுதியில் உள்ள ஷாஹிடி பூங்காவில் விவசாயிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறை குடும்பங்கள் இன்று பிற்பகல், டெல்லியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, தங்கள் கடமையைச் செய்த போலீஸ்காரர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தவுள்ளனர்.

டெல்லி முன்னாள் காவல்துறையினரும் இதில் சேரவுள்ளனர். மேலும் பணியில் இருக்கும் மற்ற காவல்துறையினரும் இதில் சேருமாறு கோரப்பட்டுள்ளது. இது ஒரு அமைதியான போராட்டமாகவும், சுமார் 1500 பேர் விவசாயிகளுக்கு எதிராக அமைதியான போராட்டத்தை நடத்துவார்கள் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

வன்முறை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் :

குடியரசு தினத்தன்று டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

வன்முறைக்கு காரணமான நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக தொடர்புடைய தண்டனை விதிகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யவும், ஜனவரி 26 அன்று தேசியக் கொடியை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு :

உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்கிறார்.

விவசாயிகளுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே நேற்று செங்கோட்டையில் நடந்த மோதலுக்கு பிறகு, டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமையை கையகப்படுத்த உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளையும் அமித் ஷா நேற்று சந்தித்துள்ளார்.

Views: - 1

0

0