புடவைக் கட்டிட்டு உள்ளே வராதீங்க… அரைகுறை ஆடைகள் மட்டும்.. : பெண்ணை தடுத்து நிறுத்திய உணவகத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

Author: Babu Lakshmanan
23 September 2021, 10:38 am
saree - updatenews360
Quick Share

டெல்லி : புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த உணவகத்திற்கு பலர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

டெல்லியில் நட்சத்திர உணவகத்தில் பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார். அந்தப் பெண்ணை உள்ளே அனுமதிக்காத உணவக ஊழியர்கள், மேற்கத்திய உடை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளா. இதனால், ஆத்திமடைந்த அந்தப் பெண், அந்த உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஊழியர்களிடம் உரையாடும் காட்சிகளை அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘புடவையில் வந்தால் உணவகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லையா..?’ என்ற கேள்விக்கு, ‘மேடம், மேற்கத்திய உடையில் வருவோருக்கு மட்டுமே நாங்கள் அனுமதி வழங்குகிறோம்; புடவையில் வருவோருக்கு அனுமதி இல்லை’ என, பதில் அளித்துள்ளார்.

இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் விதமாக செயல்பட்ட அந்த உணவகத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சுமார் 2.50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சியாக இருக்கும் இந்த உணவகத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், புடவைக் கட்டிச் சென்ற பெண்ணுக்கு ஆதராவாகவும், saree என்னும் ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 313

0

0